இந்தியாவை உலுக்கிய பாரிய தீ விபத்துக்கள்: இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?

Report Print Arbin Arbin in இந்தியா
155Shares
155Shares
lankasrimarket.com

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் குரங்கணி காட்டுத் தீ விவகாரத்தை அடுத்து இதுவரை இந்தியாவை உலுக்கிய பாரிய தீ விபத்துகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் முதலில் பாரொய தீவிபத்து என்று அறியப்பட்டது 1975 ஆம் ஆண்டு யூலை 11 ல் சென்னை எல் ஐ சி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து.

பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து என்று சொன்னால் 1979 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் திகதி தூத்துக்குடியில் உள்ள லூர்தம்மாள்புரம் லக்‌ஷ்மி டூரிங் டாக்கீஸில் நிகழ்ந்த தீவிபத்து.

இந்த விபத்தில் 73 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள் அதோடு 88 பேர் வரை தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்கள்.

1995 ஆம் ஆண்டு ஹரியானா மற்றும் பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ள டப்வாலி கிராமத்தில் பாடசாலை ஆண்டு விழா பொதுக் கூட்டத்தில் மின் கம்பத்தால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 540 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். நாடே இந்த விபத்தை பெரும் அதிர்ச்சியுடன் தான் பார்த்தது.

ஒடிசாவில் 1997 ஆம் ஆண்டு கோவில் திருவிழாவிற்காக ஏராளமான மக்கள் குழுமியிருந்தார்கள்.

மொத்தம் அங்கே மூன்று கூடாரங்கள் போடப்பட்டிருந்தன. ஒன்று சமையல் செய்ய மற்ற இரண்டும் ஆண்களுக்கு ஒன்று பெண்களுக்கு ஒன்று.

திடிரென்று சமையல் கூடாரத்திலிருந்து தீ கிளம்பியிருக்கிறது. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள் ஏராளமானோர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

ஆக்ராவில் உள்ள ஒரு ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

2004 ஆம் ஆண்டு தமிழகத்தின் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்து வகுப்பறைகளுக்கும் பரவ,

கிட்டதட்ட 94 குழந்தைகள் வரை உடல் கருகி உயிரிழந்தார்கள். ஏராளமான குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்கள்.

2016 ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புட்டிங்கால் அம்மன் கோவிலில் திருவிழாவில் பட்டாசு வெடிக்கப்பட்டதினால் ஏற்பட்ட தீப்பொறி பட்டாசு கிடங்கிற்குள் விழுந்துள்ளது.

இதில் கிட்டத்தட்ட 111 பேர் வரை உயிரிழந்தார்கள். ஏராளமானோர் காயமடைந்தார்கள். கோவிலுக்கு அருகில் இருந்த வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்