தமிழகத்தில் அடுத்து ஏற்படும் பயங்கர தீ விபத்துகள்: முன்பே கணித்துச் சொன்ன ஜோதிடர்கள்

Report Print Santhan in இந்தியா
175Shares
175Shares
lankasrimarket.com

இந்த ஆண்டு நெருப்பால பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்று ஜோதிடர்கள் சொன்னது போல் தற்போது தமிழகத்தில் அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

தற்போது தமிழ் ஆண்டான ஹேவிளம்பி ஆண்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று கடந்த வருடம் ஜோதிடர்கள் பலரிடம் கேட்கப்பட்டது. அவர்கள் சொன்னது போன்றே ஹேவிளம்பி ஆண்டு தீயால் மிரட்டி வருகிறது.

அவர்கள் கூறியது, போர் மிகுதி சாவு அதிகம் ஆகவே வேந்தர் அணி யாழமை புரிவார், வேகுவே மேதினி தீமேல் நெருப்பால் ஆபத்துகள் வரும், இந்த வருடத்தை விட வருடம் வெயில் அதிகமாக இருக்கும், நிறைய இடங்களில் தானாகவே தீ பற்றி எரிவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறியிருந்தனர்.

அவர்கள் கூறியதையடுத்து தமிழகம் திடீர் தீ விபத்துகளை அதிகமாகவே சந்தித்து வருகிறது. ஹேவிளம்பி ஆண்டு பிறந்தவுடன் அதாவது ஜுன் 1-ஆம் திகதி பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் 2-ஆம் திகதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே உள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து பக்தர்கள் பலரையும் பதற வைத்தது. இதே போன்று தமிழகத்தின் சில கோவில்களில் திடீரென்று தீ விபத்துகள் ஏற்பட்டது.

இந்த பதற்றம் எல்லாம் அடைவதற்குள் தற்போது தேனிமாவட்டத்தின் குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 9 பேரை பலிவாங்கியுள்ளது.

ஆண்டு தோறும் தமிழகத்தில் தீ விபத்துகள் ஏற்பட்டாலும், இந்த ஆண்டைப் போன்று அடுத்தடுத்து சேதங்களும் பெரிய இழப்புகளும் ஏற்பட்டதில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்