அரசியல் பேச வேண்டாம்: ரஜினியின் பேச்சால் ரசிகர்கள் அதிருப்தி?

Report Print Harishan in இந்தியா
166Shares
166Shares
lankasrimarket.com

இமயமலைக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், 15 நாள் சுற்றுப் பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார்.

அந்த பயணத்தின் ஊடாக இன்று டெராடூன் வந்துள்ள அவர், அரசியல் பேச வேண்டிய இடம் இதுவல்ல. ஆன்மீக பயணத்தில் அரசியல் வேண்டாம்.

நான் இன்னும் முழு நேர அரசியல்வாதியாக மாறவில்லை. கட்சியின் பெயரையும் அறிவிக்கவில்லை. என் நண்பர் அமிதாப் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.

இமயமலை பயணத்திற்கு பின் தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடுவார் என அவரது ரசிகர்கள் கூறி வரும் நிலையில் ரஜினியின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்