காதலிக்க வற்புறுத்திய மாணவன் செய்த செயல்: மனமுடைந்த மாணவி தற்கொலை!

Report Print Printha in இந்தியா
184Shares
184Shares
lankasrimarket.com

ஒருதலைக் காதல் காரணமாக சக மாணவர்கள் மாணவியின் ஹால்டிக்கெட்டை கிழித்து போட்டு காதலிக்க வற்புறுத்தியதால் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அருகே உள்ள தேவீரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசி.

இவர் அகரம் அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். அதே வகுப்பை சேர்ந்த பசுபதி என்ற மாணவன் தமிழரசியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான்.

பசுபதி தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தமிழரசிக்கு தொல்லை கொடுத்துள்ளான். இந்நிலையில் நேற்றைய தினம் தமிழரசி பொதுத்தேர்வையொட்டி பள்ளி சிறப்பு வகுப்பிற்கு சென்றுள்ளார்.

அப்போது பசுபதி தமிழரசியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதோடு, நண்பர்களுடன் சேர்ந்து தமிழரசியின் ஹால்டிக்கெட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு அதனை கிழித்து போட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த தமிழரசி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவி தமிழரசியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்த பின்னரே உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்த வழக்கில், மாணவி தமிழரசியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்