பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

பிரபல திரைப்பட நடிகர் நரேந்திரா ஜா மாரடைப்பால் தனது 55-வது வயதில் காலமானார்.

இந்தி, தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் நரேந்திரா, இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நரேந்திராவுக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை மூன்றாவது முறையாக ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் நரேந்திரா உயிரிழந்தார்.

அவரின் திடீர் இழப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னணி நடிகர்கள் பலர் நரேந்திரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...