விடுதலை புலிகளின் அனுதாபி! பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

Report Print Athavan in இந்தியா
320Shares
320Shares
lankasrimarket.com

26 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை புலிகள் அமைப்பின் அனுதாபி என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் ராஜிவ் கொலை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேட்டரி வாங்கி கொடுத்ததை விட கொலைச்சதியில் பேரறிவாளனுக்கு பங்கு உள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார்.

அரசின் வாதத்தை ஆட்சேபிக்க மனுதாரருக்கு (பேரறிவாளன்) ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் குற்றவாளி இல்லை என கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு 9 வாட் பேட்டரியைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்பது தெரியாதா? பேட்டரி தான் ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய பங்கு வகித்தது.

மேலும் பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்துக் காட்டி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ராஜீவ் கொலை 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இன்று தீா்ப்பை மாற்ற முடியுமா?

பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்து பார்த்தாலே அவா் விடுதலைப் புலிகள் அமைப்பின் அனுதாபி என்பது தெளிவாக தெரிகிறது என்றதுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்