ஸ்ரீதேவி கணவரிடம் ஆமீர்கான் சொன்ன ஒரு விடயம்: கதறி அழுத போனி கபூர்

Report Print Harishan in இந்தியா

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் செல்போனில் நிகழ்த்திய உரையாடல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக குளியலறை நீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.

ஸ்ரீதேவியின் உடலுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தனர். ஆனால் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ஆமீர்கான் மட்டும் வரவில்லை.

படப்பிடிப்பு ஒன்றிற்காக அமெரிக்கா வரை சென்றிருந்ததால் நேரில் வர முடியவில்லை என கூறியுள்ள ஆமீர்கான், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு செல்போன் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல சினிமா வர்த்தகர் கோமல் நஹாதா கூறுகையில், ஆமீர்கானின் நெருங்கிய நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தபோது குளியலறை தொட்டியில் மனைவி மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார்.

Old Photo: Sridevi with Aamir Khan

அவருடன் பேச குளியலறைக்குள் கணவன் சென்ற போது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால் வெந்நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் ரத்தத்தின் அழுத்தம் மேலும் குறைவடைந்து, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

நல்ல வேளை நண்பர் அவரை சரியான நேரத்தில் பார்த்தால் மனைவியின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டதும் போனிக்கு தன் மனைவி ஸ்ரீதேவியின் இறுதி நிமிடங்கள் நினைவுக்கு வந்ததால் பேசி முடித்தவுடன் கதறி அழுதுள்ளார்.

துபாய் ஹொட்டலில் பாத்ரூம் கதவை உடைத்துக் கொண்டு போனி உள்ளே சென்றபோதே ஸ்ரீதேவி முச்சு பேச்சு இன்றி கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்