அன்று விபச்சாரியின் மகன்! இன்று சாதனை மனிதர்

Report Print Balamanuvelan in இந்தியா
730Shares
730Shares
lankasrimarket.com

1980களில் மும்பையில் நாட்டியக்காரிகள் என்று அழைக்கப்படும் நடன மங்கைகளைத் தேடிச் செல்லும் ஆண்கள் ஏராளம்.

விபச்சாரிகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் உண்டு, நாட்டியக்காரிகள் பணத்துக்காக பாலுறவு கொள்பவர்கள் இல்லை.

நடனம் ஆடுவது மட்டுமே அவர்கள் தொழில், இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மகனாகப் பிறந்த ஒருவர் தான் எவ்வறு படிப்பால் சமுதாயத்தில் முன்னேறினார் என்பதை விவரிக்கிறார்.

புகழ் பெற்ற எழுத்தாளரான Manish Gaekwadஇன் தாய் ரேகா, சிறு வயதிலேயே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து குழந்தைத் திருமணம் செய்விக்கப்பட்டவர். காலப்போக்கில் பாட்டும் நடனமும் கற்றுக்கொண்ட ரேகா, ஒரு நாட்டியக்காரியானார்.

Manish Gaekwad (Image: Assad Dadan)

எப்போதும் பாட்டும் நடனப்பயிற்சியுமாக வீட்டிற்குள் இன்பமாக வாழ்ந்தபோதும் Manish வீட்டை விட்டு வெளியே வரும் போது அவரை விபச்சாரி மகன் என்று பலர் அழைப்பதுண்டு.

தன் வாழ்வு மகனை பாதிக்கக்கூடாது என்று எண்ணிய அவர் Manish Gaekwadஐ போர்டிங் பள்ளி ஒன்றில் சேர்த்தார்.

Manishம் நன்றாகப் படித்தார், பெரும்பாலும் லைப்ரரியிலேயே பொழுதைக் கழித்த Manish இன்று ஒரு பத்திரிகையாளராக உயர்ந்து நிற்கிறார்.

பிரபல பத்திரிகையில் பகுதி நேர பத்திரிகையாளராக பணிபுரியும் அவர், பத்திரிகைத் துறையில் தனக்கு எந்த முன் அனுபவமும் இல்லாவிட்டாலும் தான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம் தன்னை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்த தனது தாய்தான் என்கிறார்.

அடுத்த மாதம் தனது முதல் புத்தகமாகிய Lean Days வெளியிடப்பட உள்ளதாகக் குறிப்பிடும் Manish, எனது வாழ்வில் அல்ல, எனது தாயின் வாழ்வில் நடந்தவற்றை வெளியிடும் சரியான நேரம் இதுதான் என்று தான் எண்ணுவதாகக் குறிப்பிடுகிறார்.

Manish Gaekwad (Image: Assad Dadan)
(Image: Facebook/ Manish Gaekwad)

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்