இறப்பதற்கு முன் நடராஜனை சசிகலா எப்போது பார்த்தார்?

Report Print Santhan in இந்தியா

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் இன்று சென்னையில் காலமானார். நள்ளிரவு 1.30 மணிக்கு பிரிந்த அவரது உயிர் எம்பாபிங் செய்யப்படுவதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதன் பின் காலை 7 மணி முதல் 11 மணி வரை பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இறப்பதற்கு முன் தனது கணவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவமனையில் வந்து பார்த்தார்.

கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடராஜன் சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அவருக்கு, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவரைப் பார்ப்பதற்காக 15 நாட்கள், பரோல் கோரி, சசிகலா விண்ணப்பித்தார். ஆனால், கர்நாடக சிறைத்துறை, ஐந்து நாட்கள் மட்டுமே வழங்கியது.

கணவரை பார்ப்பதற்கு மருத்துவமனை சென்ற சசிகலா சில மணி நேரம் மட்டுமே, மருத்துவமனையில் இருந்தார். மீதி நேரம் சென்னை, தி.நகரில் உள்ள வீட்டிலேயே தங்கி இருந்தார்.

கணவரை பார்ப்பதற்காக, பரோலில் வந்தவர், மருத்துவமனையில் ஒரு சில மணி நேரம் மட்டுமே தங்கினார்.

பெரும்பாலான நேரம், குடும்ப பிரச்னை, அரசியல் பிரச்னை குறித்தே, உறவினர்களிடம் பேசியிருந்த அவர் நடராஜனிடம் ஒரு நாள் கூட முழுமையாக மருத்துவமனையில் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் சில மணிநேரங்கள் வைக்கப்படும் நடராஜனினி உடல், பின்னர் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளது.

இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பரோலில் வருகிறார். நடராஜனின் இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டவுடன் பெங்களூரு நிர்வாகம் சசிகலாவுக்கு பரோல் வழங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்