பெசன்ட் நகர் வந்தது நடராஜன் உடல்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Report Print Santhan in இந்தியா

மறைந்த எம்.நடராஜனின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நுரையீரல் நோய் தொற்று காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு தற்போது பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

11 மணிக்கு மேல், அவரது சொந்த ஊரான விளார் கிராமத்திற்குக் கொண்டுசெல்லப்பட உள்ளது.

அவரின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அஞ்சலி செலுத்திய பின்னர் ஸ்டாலின் கூறுகையில், நடராஜனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது, அவர் திராவிட இயக்கத்தின் மீதும் தமிழ் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்டவர் என கூறியுள்ளார்.

முதல் இணைப்பு- பரோலுக்கு விண்ணப்பித்துள்ள சசிகலா

கணவர் இறந்துள்ள நிலையில் சசிகலா சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் கேட்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது கணவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவர் சென்னை வந்து, கணவரை பார்த்தார். அப்போது, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பது உள்பட அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்து இருந்தது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு நடராஜன் காலமானதைத் தொடர்ந்து எம்பாமிங் செய்யப்பட்டு, அதன் பின் பொதுமக்களுக்காக அஞ்சலிக்கு வைக்கப்பட்டுவிட்டு, அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கணவனை பார்க்க வேண்டும் என்று கூறி பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் சசிகலா பரோல் கேட்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி அவர் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் கேட்கவுள்ளதாகவும், காலை 8.30மணிக்கு சசிகலாவின் வழக்கறிஞர்கள் பரோல் மனுவில் சசிகலாவிடம் கையெழுத்து பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரோல் மனுவோடு நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து வழங்கப்படும், பரோல் மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை விதிகளின் படி வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சிறை நடைமுறைகளுக்கு பிறகு சசிகலா வெளியில் வருவார் என கூறப்படுகிறது.

15 நாட்கள் பரோல் கேட்டுள்ள நிலையில், அவருக்கு எத்தனை பரோல் வழங்குவது குறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்க முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சற்று முன் எம்பார்மிங் செய்யப்பட்ட அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏரளாமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...