சிறையிலிருந்து புறப்பட்டார் சசிகலா! பல்வேறு நிபந்தனைகள் விதிப்பு

Report Print Raju Raju in இந்தியா

கணவர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக 15 நாட்கள் பரோலில் வெளியேவந்துள்ள சசிகலா சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.

செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கணவரை காண சசிகலா இரண்டு நாட்களாக பரோல் கேட்டு விண்ணப்பத்திருந்தார்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பரோல் வழங்கமுடியும் என்பதால் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்தது, இந்நிலையில் இன்று நடராஜன் காலமாகவே 15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

எனவே கணவனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார், காரில் சசிகலாவுடன் புகழேந்தி மற்றும் சில கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

அத்துடன் சில நிபந்தனைகளையும் சிறைத்துறை விதித்துள்ளது, இதன்படி பரோல் காலத்தில் சசிகலா தஞ்சாவூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஊடகங்களை சந்திக்கக் கூடாது, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாது, செல்போன் பயன்படுத்தக் கூடாது. பரோல் முடிந்து ஏப்ரல் 3ம் திகதி பிற்பகலுக்கு பெங்களூரு சிறைக்கு திரும்ப வேண்டும் எனவும் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

முதல் இணைப்பு- சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்

சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடராஜனின் மனைவி சசிகலா கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பரோலுக்கு கோரியிருந்தார்.

இந்நிலையில் சசிகலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மதியம் 1.30 மணி அளவில் சசிகலா சிறையிலிருந்து பரோலில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பின் நேராக சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் வைக்கப்பட உள்ள கணவர் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் சசிகலா.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்