முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்காக சொந்த கிராமத்தில் நிலத்தை கொடுத்த நடராஜன்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கைப் போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர் அருகே அமைக்கப்பட்ட நினைவு முற்றத்திற்கு தனது சொந்த கிராம நிலத்தை வழங்கியவர் ம. நடராஜன்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம. நடராஜன் இறுதிவரை ஈழ தமிழர்களின் ஆதரவாளராகவே இருந்தார்.

இலங்கையில் நடைபெற்ற ஈழப்போர் 2009-ல் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த நிலையில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக, தஞ்சாவூர்- திருச்சி நான்குவழிச் சாலையோரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பதற்கு முழு துணையாக இருந்தவர் நடராஜன்.

தனது சொந்த ஊரான விளார் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய நிலத்தை நினைவு முற்றம் கட்ட நடராஜன் வழங்கினார்

இதோடு, தனக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை மேடையில் ரூ. 45 லட்சத்திற்கு விற்பனை செய்து, அந்த பணத்தை பழ.நெடுமாறனிடம் வழங்கினார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்