ஜெயலலிதாவின் அரசியலையே மாற்றியமைத்த ராஜதந்திரி நடராஜன்: ப்ளாஸ்பேக்

Report Print Raju Raju in இந்தியா

மறைந்த நடராஜன் மட்டும் 1989-ம் ஆண்டு கடித யுத்தத்தை நடத்தாமல் போயிருந்தால் தமிழக அரசியலில் ஜெயலலிதா எனும் ஆளுமை இடம்பெறாமலேயே கூட போயிருந்திருக்கலாம்.

1989-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. என்னதான் அதிமுகவின் அணிகள் இணைந்தாலும் திமுகவுடன் மல்லுக்கட்ட முடியாது என்பதை உணர்ந்தார் ஜெயலலிதா.

அதே ஆண்டின் மார்ச் 15-ஆம் திகதி ஜெயலலிதா அரசியலை விட்டே ஒதுங்குவது என்ற முடிவை எடுத்தார்.

இதற்காக தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதிய அவர் அதன் நகல்களை சபாநாயகரிடமும் பத்திரிகைகளிடமும் ஒப்படைக்கச் சொல்லி கார் ஓட்டுநரிடம் கொடுத்துள்ளார்.

மறுநாள் பத்திரிகைகளில் தமது ராஜினாமா கடிதம் வரவில்லை என்பதை அறிந்து பதறிய ஜெயலலிதா இதுகுறித்து கார் ஓட்டுனரிடம் விசாரித்தார்.

அப்போது தான் இது நடராஜனின் சித்து விளையாட்டு என தெரிந்தது.

ஆம் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை கண்காணிக்க உளவாளியை நியமித்திருந்த நடராஜன், அதன் மூலம் இந்த கடிதம் தொடர்பான விடயத்தை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து ஜெயலலிதாவை வைத்து காரியங்கள் சாதிக்க போட்ட திட்டம் பாழாகிறதே என பதைபதைத்து அடியாட்களை ஏவி கார் ஓட்டுநரிடம் இருந்து கடிதங்களை பறித்து வீட்டு பீரோவில் பதுக்கி வைத்தார் நடராஜன்.

நடராஜனின் இந்த செயலால் கொதித்து போன ஜெயலலிதா அவரது வீட்டுக்கு போய் சண்டை போட்டார்.

இந்த மோதல் ஆட்சியில் இருந்த திமுக மேலிடத்தின் கவனத்துக்குப் போன நிலையில், உடனடியாக நடராஜனை கைது செய்து ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதங்களை கைப்பற்றி பகிரங்கப்படுத்தியது.

ஆனால் காலத்தின் கோலம் என்னவாயிற்று தெரியுமா? ஜெயலலிதா அரசியல் துறவறம் எனும் முடிவை கைவிட்டார், பின்னாளில் ஜெயலலிதாவின் அதிதீவிர நம்பிக்கையாளராக நடராஜன் உருவெடுத்தார்.

ஆம் ஜெயலலிதாவின் ராஜகுருவாக தமிழகம் அப்போது தான் நடராஜனை அறிந்து கொண்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...