மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைப்பு: தமிழகத்தில் பரபரப்பு

Report Print Kavitha in இந்தியா

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மர்ம நபர்கள் சிலரால் பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குடி அருகில் உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் கடந்த 2003ம் ஆண்டு பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பெரியார் சிலையின் தலையை துண்டித்துள்ளனர், இதுதொடர்பாக திராவிடர் கழக மண்டல செயலாளர் ராவணன் புகார் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ், விசாரனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் உடைக்கப்பட்ட சிலையை இணைக்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர், இச்சம்பவம் தொடர்பாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்