ஜெயலலிதா இறந்த 15 மாதத்தில் சசிகலா குடும்பத்தில் 3 மரணங்கள்

Report Print Raju Raju in இந்தியா

ஜெயலலிதா இறந்து 15 மாதங்களில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமி மற்றும் அவரின் கணவர் நடராஜன் உயிரிழந்துள்ளனர்.

2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் திகதி ஜெயலலிதா காலமானார்.

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வாரான நிலையில் பின்னர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் என அறிவிக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே நேரத்தில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் (47) தஞ்சாவூரில் இருந்தபடி அரசியல் செய்துவந்தார்.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி திருவிடைமருதூர் கோயிலுக்கு பூஜைக்காகச் செல்லும் போது மகாதேவனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மரணமடைந்தார்.

இதன் பிறகு, சசிகலாவின் மற்றொரு அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தானலட்சுமி கடந்த யூலை 27-ம் திகதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று உயிரிழந்தார்.

ஜெயலலிதா இறந்த 15 மாதத்துக்குள் அவர் உயிர் தோழி சசிகலாவின் குடும்பத்தில் மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்