எத்தனை முறைதான் சொல்வது: ரஜினிகாந்த் கோபம்

Report Print Kabilan in இந்தியா

அன்றாட பிரச்சனைகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று எத்தனை முறை தான் சொல்வது என, நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு காட்டமாக பதில் கூறியுள்ளார்.

இமயமலையில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது, காவிரி மேலாண்மை உள்ளிட்ட பல விவகாரங்களில் ரஜினி பதில் கூறாமல் இருக்கிறார் என்ற கமல்ஹாசனின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் கூறுகையில்,டிசம்பர் 31ஆம் திகதியே கூறினேன், நான் இன்னும் அரசியல் களத்தில் இறங்கவில்லை என்று, இறங்கிய பிறகு நீந்தி தான் ஆக வேண்டும்.

அதுவரைக்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று அப்போதே கூறினேன். இன்னும் எத்தனை முறை தான் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொடுப்பேன் என்று ரஜினிகாந்த் பேசிவிட்டு, பின்னர் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என்று கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

PTI/File

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers