5 வயது சிறுமியை கொன்றது ஏன்? இளம் பெண் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பையை சேர்ந்த அஞ்சலி சரோஜ் (5) என்ற சிறுமி கடந்த திங்கட்கிழமை அங்குள்ள ரயில் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பொலிசார் அஞ்சலியின் தந்தை சந்தோஷின் கள்ளக்காதலி அனிதாவை கைது செய்துள்ளனர்.

அஞ்சலியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ள அனிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தோஷுக்கும், அனிதாவுக்கும் 7 ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது.

தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அனிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி சந்தோஷ் அவருடன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக இரு முறை கர்ப்பமான அனிதா கருகலைப்பும் செய்துள்ளார்.

ஆனால் அவரை திருமணம் செய்யாமல் சந்தோஷ் ஏமாற்றி வந்துள்ளார்.

அதனால் தனது வயிற்றில் உருவான இரண்டு குழந்தைகளை கலைத்த மாதிரி, அஞ்சலியையும் கொலை செய்ய அனிதா முடிவெடுத்துள்ளார்.

அதன்படி திங்கட்கிழமை சொக்லேட் வாங்கி கொடுத்து அஞ்சலியை ரயில் நிலைய கழிப்பறைக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பொலிசார் கூறுகையில், சில சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகத்தின் பேரில் அனிதாவை விசாரித்தோம், அவர் உண்மையை ஒப்பு கொண்டுவிட்டார் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்