புதையலுக்கு ஆசைப்பட்டு பூசாரியிடம் ஏமார்ந்த பெண்: செய்த செயல்

Report Print Printha in இந்தியா

புதையல் எடுத்து தருவதாகவும், பில்லி சூனியம் நீக்குவதாக கூறிய பூசாரி ஒருவர், ஒரு பெண்ணிடம் பணம் வாங்கி ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் தங்கமாப்பட்டியை சேர்ந்த பூசாரி சக்திவேல், சென்னையை சேர்ந்த பெண் ஒருவரிடம் புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.1 கோடி பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் அந்த பூசாரி புதையலை எடுத்து தராமல் ஏமாற்றியதால் பணத்தை இழந்த அப்பெண் ஆட்களை வைத்து அந்த பூசாரியை கடத்தியுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தேடுதல் நடத்திய நிலையில், கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகே பூசாரி சக்திவேல் மீட்கப்பட்டார்.

கடத்தியவர்கள் தாக்கியதில் காயமடைந்த பூசாரி சக்திவேல் காவல் துறையினர் பாதுகாப்பில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பூசாரியை கடத்திய 7 பேர்களை பொலிஸார்கள் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்