விமானத்தின் டயர் வெடித்து விபத்து: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பிய நடிகை ரோஜா

Report Print Harishan in இந்தியா

நடிகை ரோஜா பயணம் செய்த விமானத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.

இவர் நேற்று இரவு 8.55 மணியளவில் திருப்பதியில் இருந்து ஹைதரபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார்.

அந்த விமானம் இரவு 10.25 மணியளவில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானத்தின் ஒரு டயர் வெடித்து நெருப்பு வெளியேறியுள்ளது.

நெருப்பை பார்த்தவுடன் ரோஜா உள்ளிட்ட பயணிகள் அனைவரும் பதற்றமடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கி நெருப்பை அணைத்து, பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நடிகை ரோஜா அரசியலில் பரபரப்பாக இயங்கி வருவதால், விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அவரது ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்தனர்.

இதையடுத்து, தனக்கும் தன்னுடன் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என செல்ஃபி வீடியோ மூலம் ரோஜா உறுதி படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்