கனவில் வந்து பேசும் நடராஜன்: தவிக்கும் சசிகலா

Report Print Raju Raju in இந்தியா

கணவர் நடராஜனின் மரணத்தை தாங்க முடியாமல் சசிகலா தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில், தூக்கம் வராமல் சசிகலா தவித்து வருவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இரவு நேரங்களில் திடீரென முழித்துக்கொள்ளும் சசிகலா, அதன்பின் தூங்காமல் வீட்டிற்குள்ளேயே உலவிக் கொண்டிருக்கிறாராம்.

அவரது உறவினர்கள் கேட்டால், தூக்கம் வரவில்லை. தூங்கினால் அவர் நினைவாகவே இருக்கிறது எனவும் அவர் கனவில் வந்து சோகமாக பேசுகிறார் எனவும் கூறுகிறாராம்.

நடராஜன் இருந்தவரை எல்லா விவகாரங்களிலும் சசிகலாவிற்கு அவர்தான் வழிகாட்டியாக செயல்பட்டுவந்தார்.

தற்போது அவர் மரணமடைந்துவிட்டதால், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் சசிகலா தவித்து வருவதாக தெரியவந்துள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்