நாடு நிர்வாணமாகிவிடும்: இந்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

Report Print Harishan in இந்தியா

காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் கிழிந்த வேட்டியை இந்திய அரசு பறிக்கபார்ப்பதாக வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் பின்பற்றப் படாததால் தமிழக அரசியல் தலைவர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், பிரபல பாடலாசிரியர் வைரமுத்து தன் ட்விட்டரில், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவமதித்ததாக மார்ச் 31-ஆம் திகதி இந்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்