இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: வீட்டுக்குள் குவியலாக கிடந்த பாம்புகுட்டிகள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் குவிலாக இருந்த பாம்பு குட்டிகளை பார்த்து இளம் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு இந்திரா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் இந்திரா வீட்டின் பின்புறம் வழக்கம் போல் தன்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பகுதியில் ஏதோ வெள்ளையாக இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அது என்ன என்று பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் அவை அனைத்தும் பாம்பு முட்டைகள், அதுமட்டுமின்றி அதன் அருகிலேயே பாம்புக் குட்டிகள் குவியலாக நெளிந்து கொண்டிருந்ததையும் பார்த்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அங்கிருந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட சாரைப் பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் கைப்பற்றினர்.

இவை அனைத்தும் விஷமில்லாத தண்ணீர் பாம்பு வகையைச் சார்ந்தது எனவும், ஈரம் நிறைந்த பகுதியில் வசிக்கும் இவ்வகைப் பாம்புகள் தவளை போன்றவைகளை மட்டுமே உண்டு உயிர் வாழும். நீர் நிலைகள் இருக்கும் வனப்பகுதியில் விட்டு விடுவோம் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்