காவிரியைக் கேட்டால் கர்நாடகாவிலிருந்து துணைவேந்தர் வருகிறாரே.. கமல்ஹாசன் கோபம்

Report Print Raju Raju in இந்தியா

கர்நாடகாவிடமிருந்து தண்ணீரை கேட்டால், துணை வேந்தர் வருகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவிரி விவகாரத்தையும், துணை வேந்தர் விவாகாரத்தையும் இணைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள்.

இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது? என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்