மூத்த திரைப்பட நடிகர் மாரடைப்பால் மரணம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல மூத்த நடிகர் ராஜ் கிஷோர் மாரடைப்பால் தனது 85-வது வயதில் காலமானார்.

பாலிவுட்டில் ஷோலே, ஹரே ராம ஹரே கிருஷ்ணா, தீவர் போன்ற பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளவர் ராஜ் கிஷோர்.

இந்நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக கிஷோர் என அழைக்கப்படும் ராஜ் கிஷோர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து நடிகர் அலங்கார் கூறுகையில், சில காலமாக வயிற்று கோளாறால் கிஷோர் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் படுத்த படுக்கையாக இல்லை. இந்நிலையில் தான் தீடீர் மாரடைப்பு அவருக்கு ஏற்பட்டது என கூறியுள்ளார்.

உயிரிழந்த கிஷோருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

கிஷோரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...