நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்: பிணைத்தொகை எவ்வளவு?

Report Print Raju Raju in இந்தியா

மான் வேட்டையாடிய வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஹம் சாத் சாத் ஹைன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இந்தி நடிகர் சல்மான் கான் அங்குள்ள இரண்டு மான்களை சுட்டு கொன்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இரு தினங்களாக சிறையில் இருந்த சல்மான் கான் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் தொகையாக 50,000 ரூபாய் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers