ஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

Report Print Athavan in இந்தியா

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி போராட்டங்கள் வளுத்துள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்துக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. மே மாதம் 27-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 11 நகரங்களில் இந்தப் போட்டி நடக்கிறது.

ஐ.பி.எல். போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. வருகிற 10-ந்தேதி நடை பெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், ஒட்டு மொத்த எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையிலும் ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல். போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஐ.பி.எல். போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளதால் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers