அனைத்தையும் மறக்க வைத்துவிட்டதா ஐபிஎல் போட்டி? அடுத்த நிமிடமே பிராவோவை டிரண்டாக்கிய ரசிகர்கள்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் இந்தாண்டு நேற்று கோலாகலமாக துவங்கியது.

எட்டு அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் உலகின் தலைசிறந்த வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு குறிப்பிட்ட எட்டு அணிகளுக்கு விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சூதாட்ட தடை காரணமாக பங்கேற்காமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தாண்டு பங்கேற்று விளையாடி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டோனியே இந்தாண்டும் தலைவராக பொறுப்பேற்றார். தமிழக ரசிகர்களின் செல்லப் பிள்ளை என்றழைக்கப்படும் அவரை தமிழக ரசிகர்கள் தல, மற்றொரு வீரரான ரெய்னாவை சின்ன தல என்று அழைப்பர்.

அதற்கு ஏற்ற வகையில் சென்னை அணியின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வீரர்களின் ஒவ்வொரு அசைவுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே ஸ்டெர்லைட் மற்றும் காவேரி மேலாண்மை குறித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தண்ணீர் இருந்தால் தான் நமக்கு சோறு என்றும் இப்போது நீ விழிக்காவிட்டால் தற்போது தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் என்ன நிலைமையோ அதே நிலைமை தான் இன்னும் சில ஆண்டுகளில் உனக்கு ஏற்படும்.

அதனால் விழித்திடு, நமக்கான உரிமை, காவேரி மேலாண்மை அமைக்கும் வரை போராடுவோம் என்றெல்லாம் சமூகவலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் என அனைத்திலும் பதிவுகள் பறந்தன.

இப்படி சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்து வந்த இந்த பதிவுகள் நேற்று ஒரே ஒரு போட்டியால் காணாமல் போய்விட்டன.

அந்த போட்டி தான் மும்பை-சென்னை அணிகள் மோதிய போட்டி, சென்னை அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்த போது, பிராவோ சிக்ஸர் மழை பொழிந்து சென்னை அணிக்கு கடைசி நிமிடத்தில் வெற்றி தேடித்தந்தார்.

ரசிகர்களை நுனி சீட்டில் உட்கார வைத்த இப்போட்டியை பற்றி தான் தற்போது சமூகவலைத்தளங்களில் பேச்சு, ஸ்டெர்லைட் மற்றும் காவேரி மேலாண்மை அமைப்பது குறித்து மீம்ஸ் வீடியோக்கள் எல்லாம் போய், தற்போது பிராவோ மீம்ஸ் வீடியோக்கள் வெளி வர ஆரம்பித்துவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்