நண்பரின் மனைவியை கொலை செய்தது ஏன்? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

நண்பரின் மனைவியுடன் இளைஞருக்கு தகாத உறவு இருந்த நிலையில் பண விடயம் சம்மந்தமாக அவரை கொலை செய்ததாக இளைஞர் வாக்குமூலம அளித்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் நாக பூஷனம். இவர் மனைவி சவுமியா (27).

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சவுமியா தனது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

அவர் எதற்காக மற்றும் யாரால் கொலை செய்யப்பட்டார் என பொலிசார் விசாரித்து வந்த நிலையில் நாக பூஷனத்தின் நண்பரான பட்டிபட் பிரகாஷ் (28) தான் சவுமியாவை கொலை செய்தார் என்பதை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து பிரகாஷை பொலிசார் கைது செய்த நிலையில் அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கட்டிட தொழில் செய்து வந்த நாக பூஷனத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரகாஷுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களான நிலையில் அடிக்கடி சந்தித்துள்ளனர்.

அப்போது சவுமியாவுக்கும், பிரகாஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவருக்கு தெரியாமல் இந்த தொடர்பை சவுமியா தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பணப்பிரச்சனையால் பிரகாஷ் தவித்து வந்துள்ளார்.

இதையடுத்து தனக்கு பண உதவி செய்யுமாறு சவுமியாவிடம் கேட்க அவர் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் இரும்பு கம்பியால் சவுமியாவை பிரகாஷ் அடிக்க அவர் கீழே சுருண்டு விழுந்துள்ளார்.

பின்னர் பிளேடால் சவுமியாவின் கழுத்தை அறுத்து, எண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார்.

இதையடுத்து சவுமியா உயிரிழந்து விட, அங்கிருந்து பிரகாஷ் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்