காவரி விவகாரம்: நடிகர்கள் போராட்டம் தொடங்கியது! ரஜினி, கமல், விஜய் பங்கேற்பு

Report Print Raju Raju in இந்தியா

காவரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் அறவழி போராட்டம் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.

வள்ளுவர் கோட்டம் அருகில் மேடைகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், ரஜினி, கமல், விஷால், சிவகுமார், சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் இளையராஜா போன்றோரும் இதில் பங்கேற்றுள்ளனர்

கூட்டத்தில் பேசிய நாசர், காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்துவது நமது கடமை.

திரையுலகம் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், மக்களுக்காக போராடுவது முக்கியம் என கருதியதால் போராட்டம் நடத்துகிறோம்.

இது மெளன போராட்டம் என்பதால் வேறு நடிகர்கள் யாரும் மேடையில் பேச மாட்டர்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers