நான் என்றுமே தமிழர்களின் பக்கம்: நடிகர் சத்யராஜ்

Report Print Fathima Fathima in இந்தியா

நான் என்றுமே தமிழர்களின் பக்கம் தான், தமிழ் உணர்வுகளின் பக்கம் தான் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இன்று நடந்த மௌன போராட்டத்தின் முடிவில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார்.

அவர் பேசுகையில், நான் என்றுமே தமிழர்களின் பக்கம், தமிழ் உணர்வுகளின் பக்கம் தான் இருக்கிறேன்.

வேண்டும் வேண்டும் காவிரி மேலாண்மை அமைத்தே தீர வேண்டும், மூடுங்கள் மூடுங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்.

தமிழனின் உணர்வுகளை மதியுங்கள், எந்த அரசாக இருந்தாலும் ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம், எந்த கெடுபிடிக்கும் அஞ்ச மாட்டோம்.

குரல் கொடுக்க தைரியம் இருப்பவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள், இல்லாவிட்டால் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்