காவிரி விவகாரம்: போராட்டத்தில் நடிகர்கள் செய்த செயல்! முகம் சுழித்த மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

காவரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மெளன போராட்டம் நடத்திய நடிகர்கள் நடந்து கொண்ட விதம் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள மெளன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மக்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் திரையுலகினரோ சீரியஸாக இல்லாமல் போராட்ட பந்தலில் ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் திரையுலகினர் இடைவிடாது சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருப்பதை டிவியில் பார்த்து மக்கள் எரிச்சல் அடைந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஜாலியாக பேசி கொண்டிருந்தது காண்போரை முகம் சுழிக்க வைத்தது.

ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இதில் கலந்து கொண்டாலும் 80-களில் திரையுலகில் கொடிகட்டி பறந்த திரைபிரபலங்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

மோகன், டி ராஜேந்தர், பாக்யராஜ், கார்த்திக், அர்ஜுன், பிரபு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை

அதே போல ராதா, அம்பிகா, ராதிகா, குஷ்பு, ரேவதி, ராமயா கிருஷ்ணன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

நடிகர் சங்கத்தின் முன்னாள் தூண்களான சரத்குமார், ராதாரவி போன்றோரும் இதில் பங்கேற்காத நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இடம்மாறி பெரிய ஆட்களாக வளர்ந்து நிற்கும் பிரகாஷ்ராஜ், பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற நபர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் இதே 80-ஸ் நடிகர், நடிகைகள் நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மட்டும் தவறாமல் போட்டியிடுகிறார்கள்.

பார்ட்டி என்றால் ஓடுகிறார்கள், ஆனால் மக்கள் போராட்டத்திற்கு வரமாட்டார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்