தமிழகத்திற்கு சூனியம் வைத்துவிட்டார்கள்: நடிகர் சிம்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று நடிகர் சங்கம் சார்பில் மௌனப்போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை.

இந்த மௌனப்போராட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஏனெனில் பேசாததால் தான் தற்போது பிரச்சனையே, எல்லோரும் சரியான தருணத்தில் பேசியிருந்தால் கண்டிப்பாக நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கும்.

தொடர்ந்து தமிழகத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கின்றது, இது எப்போது இருந்து என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா இறந்த பிறகு தான் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது, தமிழகத்திற்கு யாரோ சூனியம் வைத்தது போல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்