அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய பொலிஸ்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் பணியில் இருந்த காவலர்கள் நடன அழகிகளுக்கு ரூபாய் நோட்டுகளை வழங்கியதால் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சமூகவலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், காவலர் சீருடையில் இருக்கும் குறித்த காவலர்கள், மேடையில் பாலிவுட் பாடல்களுக்கு நடன ஆடும் பெண்களுக்கு ரூபாய் நோட்டுகளை பரிசளித்தனர்.

மேடையில் பெண்கள் ஆட ஆட ரூபாய் நோட்டுகளை பரிசளித்துக்கொண்டே இருந்தார். இந்தக்காட்சிகளை படம்பிடித்த சிலர் அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதையடுத்து அந்த காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் திருவிழா பாதுகாப்பு பணிக்காக சென்ற சென்ற காவலர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்று நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போஜ்பூரி நடனமாடிய பெண்ணுக்கு ரூபாய் நோட்டுகளை வீசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்