ஸ்ரீ ரெட்டியுடன் இனி நடிக்க மாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Report Print Kabilan in இந்தியா

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தன்னிடம் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நிலையில், அவருடன் இனி நடிக்க மாட்டோம் என தெலுங்கு நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் வெளியிட போவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டினை மறுத்த தெலுங்கு திரையுலகினர், அவர் நடிப்பதற்கான உரிமத்தினை ரத்து செய்தனர்.

இதன் பின்னர் இந்த முடிவை எதிர்த்தும், தனக்கு நியாயம் வேண்டும் என்றும் கோரியும், ஐதராபாத் நடிகர் சங்க அலுவலகம் எதிரே ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ஸ்ரீ ரெட்டியுடன் இனி நடிக்க போவதில்லை என தெலுங்கு நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா கூறுகையில்,

‘ஸ்ரீ ரெட்டியின் செயல் எங்கள் மனதை புண்படுத்தியுள்ளது. அவர் கூறும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட உண்மையில்லை. அவர் போராட்டம் நடத்துவதற்கு என்னை சந்தித்தார். நான் அவருக்கு உரிய உதவிகள் செய்வதாக கூறினேன்.

ஆனால், ஊடகங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ரெட்டி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நாங்கள் துறை ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

அவரின் அங்கீகார அட்டையை ரத்து செய்துள்ளோம். அவருடன் எங்கள் சங்கத்தை சேர்ந்த எந்த கலைஞரும் இனி நடிக்க மாட்டார்கள். அவ்வாறு நடித்தால் அவர்களும் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்