காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் நேற்று மௌனப்போராட்டம் நடத்தப்பட்டது.
இதில், ரஜினி, கமல் விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் நடிகர் ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதில் ஆன்மீக கொள்ளைபடி உங்களை எதிரியாக பார்ப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உங்கள் பதில் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்புகையில், கமல் எனது எதிரி கிடையாது. ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை மற்றும் மீனவர்களின் கண்ணீர் தான் எனது பிரச்சனை.
இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கவில்லை. தமிழர், தமிழர்ன்னு சொல்றாங்க, அரசியல்வாதிகள் என்ன பண்றாங்க என ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேற்கூறிய இவை அனைத்தும் தான் எனது எதிரி என கூறியுள்ளார்.
மேலும், காவிரிக்காக தமிழகம் போராடுகையில் ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லதுதான் என கூறியுள்ளார்.