காவிரி பிரச்சனை எதிரொலி: இந்திய வீரர் ரெய்னாவின் நிகழ்ச்சி ரத்து

Report Print Kabilan in இந்தியா

ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா திருநெல்வேலியில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிக்கு தடை விதிக்கக் கோரி கோரிக்கை எழுந்துள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் போட்டி நடந்தால் காவிரி போராட்டம் பாதிக்கும் என்றும், பெரிய அளவில் பிரச்சனை ஏற்படும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்தார். ஆனால் ஐ.பி.எல் எதிர்ப்பைத் தொடர்ந்து, ரெய்னா கலந்து கொள்ள இருந்த இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்