நடிகர் சங்கம் போராட்டத்துக்கு வராதது ஏன்? இயக்குனர் பாரதிராஜா

Report Print Kabilan in இந்தியா

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்றும் வரை, அந்த சங்கம் ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ள மாட்டேன் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, நேற்று திரை உலகினர் சார்பில் அமைதிப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சத்யராஜ் என பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் அஜித், சிம்பு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பாரதிராஜா, தான் ஏன் அமைதிப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு அனைத்திற்கும் சேர்த்து தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னையில் இருந்தது. ஆனால், இன்று எல்லா மாநிலங்களும் அவர்களுக்கு என தனித்தனியாக ஒரு அமைப்பை வைத்துள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரே உள்ளது, அது இன்னும் மாற்றப்படவில்லை.

எனவே, அந்தப் பெயரை மாற்றும் வரை அந்த அமைப்பு சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சத்யராஜ், அமீர், வி.சேகர், ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்