ரஜினியை சத்யராஜ் சீண்டுவதன் பின்னணி காரணம் என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நேற்று நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மௌனப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ், ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம், இராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம், எந்த கெடுபிடிக்கும் அஞ்சமாட்டோம். குரல் கொடுப்பவர்கள் தைரியமிருந்தால் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லை ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

இது ஒன்றும் முதல்முறை அல்ல, பலமுறை நடிகர் சத்யராஜ், ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

2008ஆம் ஆண்டு ஒகேனக்கல் பிரச்சனையில் தண்ணீருக்காகவும் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக திரையுலகம் நடத்திய கண்டன கூட்டத்தில், "ஒரு நடிகன் பேரைச் சொன்னா கைதட்டல் வரும். ஆனா, அப்படி நடிகன் பேரைச் சொல்லி கைதட்டல் வாங்குறதுக்கு பதிலா நான் நாக்கைப் புடுங்கிட்டு சாவேன் என்று மறைமுகமாக ரஜினியை சாடினார்.

ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' திரைப்படம் தொடங்கப்பட்ட பொழுது, சுமன் நடித்த 'ஆதிசேஷன்' வில்லன் பாத்திரத்துக்கு முதலில் அணுகப்பட்டவர் சத்யராஜ்தான்.

அப்பொழுது, இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி என் படத்தில் வில்லனாக நடிக்கத் தயாரென்றால் நான் இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறேன்" என்று கூறி வாய்ப்பை மறுத்தார். பிறகு, அவர் ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' படத்தில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார்.

தொழில்ரீதியாகவும் இவர்களுக்குள் இப்படி ஒரு மனக்கசப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்