பள்ளிப்பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 29 குழந்தைகள் பலி...பலர் காயம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இமாச்சலப்பிரதேச மாநிலம், நுர்பூர் அருகே பள்ளிப்பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பள்ளி மாணவர்கள் பலியானார்கள், பலர் காயமடைந்தனர்.

மக்வால் நகர் அருகே வாசிர் ராம் சிங் பதானியா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் பேருந்து இன்று மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளிப் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த 100 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குறைந்தபட்சம் 29 குழந்தைகள் பலியாகினர். பலியான குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்குள் உள்ளவர்கள், அனைவரும் 5-ம் வகுப்புவரை படித்து வந்தவர்கள் என்பதால், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இமாச்சலப் பிரதேச கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் கூறுகையில், விபத்தில் 29 மாணவர்கள் பலியாகினர். 29 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்