பொருட்களை தங்கமாக மாற்றும் மூலிகை: மர்ம தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
106Shares
106Shares
ibctamil.com

சேலம் மாவட்டம் சூரியமலையில் இருக்கும் மூலிகைகள் எந்த ஒரு பொருளையும் தங்கமாக மாற்றும் சக்தி வாய்ந்தவை என கூறப்படுவது மர்மமாக உள்ளது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் சூரியமலை தென்படும்.

இந்த மலையில் இருக்கும் பாதாள குகை முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் இந்த சிலைகளை வணங்குவதற்கு பக்தர்கள் குவிகின்றனர், மேலும் இங்கு இருக்கும் பாதாள குகைக்குள் யாரும் இதுவரை சென்றதில்லை.

இங்கு, கொங்கண சித்தர் என்பவர் வாழ்ந்து வந்ததாகவும், அவருக்கு பல சித்து விளையாட்டுகள் தெரிந்திருந்தது எனவும் கூறப்படுகிறது.

மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தி எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர் என்றும் கூறப்படுகிறது. குகைக்குள் உள்ள மைதானம், நாலுகால் மண்டபத்தில் தங்கப்புதையல் இருப்பதாகவும், இந்த புதையலை சித்தர் தான் இன்றைக்கும் பாதுகாத்து வருவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

மேலும், தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி இன்றும் சித்தர் ஓய்வெடுத்து வருகிறார் என்கின்றனர். குகைக்கு வெளியே மலைப்பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. மலையை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாக காணப்படுகிறது. 2வது அறை சிறியது. இந்த அறையில் தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப்படுகிறது. இவ்வாறு அந்த பகுதியில் பல மர்மங்கள் மறைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்