சப்பாத்தியை அளந்து பார்த்து மனைவியை தண்டிக்கும் கணவன்

Report Print Trinity in இந்தியா
150Shares
150Shares
ibctamil.com

புனேயை சேர்ந்த இளம்பெண் தனது கணவன் 20செமீ அளவிலான சப்பாத்திகளைத் தயாரிக்க சொல்வதும் அதனை அளந்து பார்த்து அவ்வாறு இல்லையென்றால் தண்டனையும் தருவதாகக் கூறி விவாகரத்து தாக்கல் செய்திருக்கிறார்.

மேலோட்டமாக பார்க்கையில் மிக சாதாரணமாக ஆரம்பிக்கும் இந்த செய்தி போகப் போக நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

சப்பாத்தியை அளந்து பார்ப்பது மட்டுமல்ல தினசரி செய்யும் வேலைகளை எக்ஸெல் ஷீட்டில் போட்டு வைக்கவும் சொல்வாராம். செய்த வேலைகள் பாக்கி இருக்கும் வேலைகள் ஆகியவற்றை எக்ஸெல் ஷீட்டில் போட்டு வைக்கும் மனைவி தன் கணவருடன் பேசக் கூட மின்னஞ்சல் மூலம் அப்பாயின்மென்ட் வாங்க வேண்டுமாம்.

திருமணமாகி 10 வருடங்கள் ஆன நிலையில் இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் குடும்ப வன்முறை சட்டம் மூலம் விவாகரத்து கூறியிருக்கிறார் இவரது மனைவி.

தனது 10 வருட திருமண வாழ்க்கை பற்றி அந்தப் பெண் பாயல் (புனைப்பெயர்)பேசிய போது நெஞ்சம் அதிர்ந்துதான் போகிறது.

முதலிரவில் இருந்து ஆரம்பித்த கொடுமைகள் இன்னமும் தொடர்வதால் இது சரியாகும் என்கிற நம்பிக்கையை தான் இழந்து விட்டதாக அவர் கூறினார்.

ஒரே ஊரை சேர்ந்த இவ்விருவரும் திருமணம் செய்து கொண்ட பின்பும் அவரவர் வீட்டில்தான் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

சில நாட்கள் இரவு வேளைகளில் மட்டும் கணவன் அமித் (புனைப்பெயர் )வீட்டிற்கு மனைவி சென்றுள்ளார்.

காரணம் கேட்ட போது சில நாட்களில் வெளிநாடு போக வேண்டி இருக்கிறது அதற்குள் ஏன் இன்னொரு செலவு செய்து கொண்டு என்று மனைவியோடு வாழ்வதை தவிர்த்திருக்கிறார் அமித் .

ஏதோ ஒருமுறை கோபத்தில் அமித்தின் கையில் இருந்த பொருளை வீசிய வேகத்தில் அவரது கணினி உடைந்திருக்கிறது. அத்தனை ஆக்ரோஷமான அவர், அதே கோபத்தில் பாயலை அடித்த அடியில் அவர் மயங்கி இருக்கிறார்.

குழாயின் அடியில் பாயலை இழுத்து சென்று அமர வைத்து நினைவு திரும்பியவுடன் மீண்டும் அடித்திருக்கிறார். அதே இரவில் ஈரத் துணியுடன் பாயலை அவரது வீட்டில் விட்டிருக்கிறார்.

அது மட்டுமின்றி பல முறை கருவை கலைக்க சொல்லி கட்டாயப் படுத்தியிருக்கிறார்.

பணம் சம்பாதிக்க சொல்லி சித்ரவதை செய்த அமித் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டப்படிப்பு படித்த பாயலை வீடு வீடாக சென்று பேசியல் செய்ய வைத்திருக்கிறார்.

பாயலுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைத்த பின் குழந்தைக்கான பொறுப்பு அனைத்தும் பாயலுடையது என்கிற நிபந்தனையின் பேரில் அவர் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிருக்கிறார் இந்த அதி மேதாவிக் கணவன் அமித்.

பிரசவத்திற்கு 15 நாள் முன்பு வரை வேலை பார்த்த பாயல் குழந்தை பிறந்த பின் இந்தக் குழந்தை மேலும் அமித்திற்கு அக்கறை இல்லை எனத் தெரிய வரும்போது தான் மிகவும் உடைந்து போனதாக கூறினார் .

ஒருமுறை தான் அலுவலகத்திலிருந்து வரத் தாமதமான போது குழந்தையை கிரஷில் இருந்து அழைத்து வர அமித் தயாராக இல்லை.

இரவு 10 மணிக்கு சென்று குழந்தையை அழைத்து வந்த பாயல் அதன்பிறகு வேலையை விட்டிருக்கிறார் .

வேலையை விட்ட பிறகு ஒவ்வொரு முறையும் இவரது கொடுமைக்கான வழிமுறைகளைக் மாறிக்கொண்டேயிருக்கும்.

இதன் காரணமாக சண்டை ஏற்பட்டால் கத்தியை எடுத்துக் கொண்டு குழந்தையைக் காயப்படுத்துவதாக மிரட்டி இருக்கிறார் அமித்.

தனது கோட்பாடுகள் படி செயல் நடக்க வேண்டும் எனும் அமித் ஒருமுறை குழந்தை இரவு உணவுக்குப் பின் அமித்திடம் கொடுக்க வேண்டும் என்கிற குறிப்புப் படி பாயல் செய்யத் தவறியதால் 5வது மாடியில் இருந்து குழந்தையை கீழே விடப் போவதாக மிரட்டி இருக்கிறார்.

தன் மீதான அத்தனை குற்றங்களையும் மறுக்கும் அமித் வழக்கம் போல மனைவியின் நடத்தை மீது பழி சுமத்தியுள்ளார்.

இப்போது இவர்கள் வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.

மொத்தத்தில் பார்க்கும்போது அமித்தின் நடவடிக்கைகள் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பது போல இருக்கின்றது.

இதனை ஆங்கிலத்தில் சின்ரோம் அல்லது போபியா என்று அழைப்பது வழக்கம். சமூகத்தில் நடக்கும் நிறைய குற்றங்கள் இதன் அடிப்படையில்தான் நிகழ்கின்றன.

உளவியல் ரீதியான பாதிப்புகள் அவர்களது குழந்தைப் பருவம் முதலியவைகளின் அடிப்படையில் ஏற்படுகின்றது.

வெளியே பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் அமித் உள்ளே இவ்வளவு குரூரமானவராகவும் இருந்திருக்கிறார்.

இந்த நிகழ்வைப் படிக்கும் எவருக்கும் எந்த மனிதரின் செயலும் தொடர்ந்து வழக்கத்திற்கு மாறாக இருக்கும்பட்சத்தில் அவருக்குத் தேவையான உளவியல் சிகிச்சையை செய்வது அவசியம் என்கிற கவனம் வர வேண்டும்.

அதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமல்ல பாதிப்பை ஏற்படுத்திய நபரும் குணமாக வாய்ப்பு இருக்கிறது என்று நாம் நம்பிக்கை கொள்ளலாம்.

Thanks to BBC tamil

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்