கர்ப்பிணி பெண்ணை கற்பழித்த கும்பல்: கொடூர சம்பவம்

Report Print Kabilan in இந்தியா
235Shares
235Shares
ibctamil.com

இந்தியாவில் கர்ப்பிணி பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரின் புறநகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அப்பெண்ணை கடத்திச் சென்றுள்ளது. அதன் பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கர்ப்பிணியை தூக்கிச் சென்ற அந்த கும்பல், கொடூரமாக கற்பழித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுயநினைவை இழந்த அப்பெண்ணை அந்த கும்பல் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றது. இந்நிலையில், அவ்வழியாக வந்த மக்கள் சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பொலிசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மயக்கம் தெளிந்த கர்ப்பிணி பெண் அளித்த விவரங்களின் அடிப்படையில், 4 வாலிபர்களையும் போலிசார் தேடி வருகின்றனர்.

உன்னாவ் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கர்ப்பிணி பெண்ணொருவர் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்