ஐபிஎல் போட்டியின்போது பாலியல் துஷ்பிரயோகம்: பொலிசாரிடம் புகார் அளித்த இளம்பெண்

Report Print Arbin Arbin in இந்தியா
173Shares
173Shares
ibctamil.com

ஐபிஎல் போட்டியின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

போட்டியின் போது மைதானத்தில் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மும்பை வான்கடே மைதானத்தில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் குறித்த தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.

பிரபலமான கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் தொடரின்போது பாலியல் புகார்கள் எழுவது இது முதல்முறையல்ல.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான நெஸ் வாடியா, தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரும், நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2014-ல் காவல்துறையில் புகார் அளித்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற போட்டியின் போது நெஸ் வாடியா, தனது கையைப் பிடித்து இழுத்ததாக, ப்ரீத்தி ஜிந்தா அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்