பெத்த தாய்ன்னா இப்படி செய்வார்களா?

Report Print Deepthi Deepthi in இந்தியா
242Shares
242Shares
lankasrimarket.com

ஈரோடு கோனவாய்க்கால் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 20 பெண்மணிகள் தங்கியுள்ளனர்.

அவர்களுக்குக் குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுப்பதுதான் தொழில்.

இந்நிலையில் சம்பம் நடைபெற்ற அன்று, பெண்மணி ஒருவர் தன்னுடைய தோளில் சுமார் ஒரு வயதான பச்சிளங் குழந்தையை வைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தையின் உடலில் அம்மை போட்டது போல உடலெல்லாம் கொப்புளமாகக் கிடந்தது. இதனைப் பார்த்துக் கோபமடைந்த பயணிகள், ‘உன் மேல் சந்தேகமாக இருக்கு. இது உன் குழந்தை தானா? குழந்தை உடம்புல இவ்ளோ கொப்புளமாக இருக்கிறது.

பெத்த தாய்ன்னா இப்படிச் செய்வாளா எனகேட்டு அந்தப் பெண்மணியை சத்தம்போட்டு பேருந்து நிலையத்தில் இருந்த பொலிசாரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்