புலிகள் பெயரால் உலகம் முழுவதும் வசூலிக்கிறார் சீமான்! ஆவேசப்பட்ட வைகோ

Report Print Fathima Fathima in இந்தியா
180Shares
180Shares
ibctamil.com

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்னை வைத்து மீம்ஸ் போட்டு குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர் என பகிரங்கமாக சீமான் மீது குற்றம்சாட்டினார் வைகோ.

இதுதொடர்பாகவும், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகவும் பிரபல தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் சீமான் பற்றி கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எட்டு வருடமாக நஞ்சை கக்கிக் கொண்டிருக்கிறார்.

ஈவேரா பெரியார் மூலமாக நாட்டு கெட்டுப் போய்விட்டது என மேடைக்குமேடை பேசினார், அண்ணாவை தவறாக பேசினார்.

என்னை கலங்கப்படுத்தும் விதமாக பல மேடைகளில் பேசவைத்துள்ளார், எட்டு வருடமாக பொறுத்துக் கொண்டேன்.

ஆனால் ஸ்டெர்லைட்டை சேர்த்து மீம்ஸ் போட்டு களங்கப்படுத்தியால் அவ்வாறு பேசினேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் உலகம் முழுவதும் புலிகள் பிரிதிநிதி என கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் வசூல் செய்தும் வருகின்றனர்.

பிரபாகரனுக்கு அடுத்தபடியாக பழ.நெடுமாறன், வைகோவை நினைக்கின்றனர், இதை சொல்லி அரசியல் பண்ணமுடியவில்லையே, தான் பார்த்ததோ 10 நிமிடம்.

புலிகளின் சீருடையை அணிந்து கொண்டு புகைப்படம் எடுக்க அனுதிக்கவில்லை.

இவர்களே மார்பிங் செய்து போட்டோவை வெளியிட்டனர், புலிகளின் லோகோவில் சிறிய மாற்றம் செய்து நாம் தமிழர் கட்சியின் கொடியாக வெளியிட்டனர்.

பிரபாகரன் உயிரோடு வெளியே வரமாட்டார் என்ற தைரியத்தில் இவ்வாறு செய்தனர், அவர் வெளிப்படையாக வருவதாக இருந்தால் நொடியில் தூசியாகி இருப்பார்கள்.

உலகம் முழுவதும் உள்ள புலிப்படையின் உண்மையான தளபதிகள் இதை சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

கேணல் பரிதியை கொன்ற இருவர் சீமானுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர், இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

புலிகள் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தினால் நான் இடம் கொடுக்க மாட்டேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்