மாணவிகளை பாலியல் ஆசைக்கு இணங்க வற்புறுத்திய பேராசிரியை: வீட்டை உடைத்து கைது செய்த பொலிசார்

Report Print Santhan in இந்தியா
372Shares
372Shares
lankasrimarket.com

தமிழகத்தில் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை பொலிசார் அவரின் வீட்டின் கதவை உடைத்து கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக இருப்பவர் நிர்மலா தேவி.

இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்காக கல்லூரி மாணவிகளிடம் அவர்களின் ஆசைக்க இணங்க வேண்டும் எனவும், அப்படி மட்டும் செய்தால் 85 சதவீத மதிப்பெண் மற்றும் கை நிறைய பணம் கிடைக்கும் என்று கூறியது தொடர்பான ஓடியோ நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

ஒரு ஆசிரியை இப்படி செய்யலாமா? என்று கூறி பலரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விருதுநகரில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டின் முன்பு சில மணி நேரங்களுக்கு முன்னர் பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில், தற்போது நீர்மலாவின் வீட்டை உடைத்து பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்