கணவன் இறந்து போன பின் நெற்றியில் பொட்டு வைத்த பாட்டிக்கு நேர்ந்த கதி

Report Print Trinity in இந்தியா
187Shares
187Shares
ibctamil.com

கணவன் இறந்த பின் நெற்றியில் பொட்டு வைத்திருந்த மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்துள்ளனர்.

சென்னையில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் (82) துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். கணவரின் மரணத்திற்குப் பின் வர வேண்டிய பென்ஷன் தொகைக்காக அவரது மனைவி தேவி தனது மகனுடன் பென்ஷன் வாங்கும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த அதிகாரி ரவியிடம் அவர் கேட்ட அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை இவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால் மூதாட்டி தேவியை நேரில் பார்த்த ரவி, புகைப்படத்தில் பொட்டு இருக்கிறது எனக் கூறி இவர்களது விண்ணப்பத்தை மறுத்துள்ளார்.

அந்தப் புகைப்படம் அவர் கணவர் இறப்பதற்கு முன் எடுத்த புகைப்படமாகும். இந்தப் பிரச்னைக்குப்பின் மீண்டும் புகைப்படம் எடுக்க போன இடத்தில் அவரது பொட்டை அகற்றும்போது தேவி மிகவும் மனமுடைந்து போனதாக அவரது மருமகள் தெரிவித்தார்.

கணவரை இழந்த பெண்கள் பொட்டை எடுக்க வேண்டும் என்கிற அந்த அதிகாரியின் எண்ணம் வெட்க கேடானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்குப் பின் விரைவாக ஓய்வூதியம் வழங்கக் கோரி அவர்கள் மறுநாள் அதே அலுவலகத்திற்கு செல்கையில் அன்று அந்த அதிகாரி ரவி விடுப்பில் இருந்திருக்கிறார்.

அதே அலுவலகத்தை சேர்ந்த இன்னொருவரிடம் இது போல நடப்பது முறைதானா என மகளும் மருமகளும் கேட்டுள்ளனர் அதற்கு அந்த அதிகாரியோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க என எளிமையாகக் கூறி முடித்திருக்கிறார்.

ஏற்கனவே ஒரு உறவின் இழப்பில் இருப்பவருக்கு இந்த விதமான மன உளைச்சல்களைத் தருவது நியாயம்தானா என்பதை பென்ஷன் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் யோசிக்க வேண்டும்.

மனதளவிலும் உடலளவிலும் பலவீனமான முதியவர்களை அக்கறையுடன் அணுகுவதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்பதே அந்த அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள் சார்பாக இங்கு வைக்கும் கோரிக்கை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்