சிறுமி ஆஷிபா கொலை வழக்கு: பேஸ்புக்கில் 7,600 முறை பகிரப்பட்ட வதந்திகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்ட 8 வயது சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய மக்கள் தெரிவித்துள்ள நிலையில், சங்க்நாத் என்ற பெயரில் பகிரப்பட்ட வதந்திகள் பேஸ்புக்கில் 7,600 முறை பகிரப்பட்டுள்ளது.

பகிரப்பட்ட வதந்திகள்

ஆஷிபாவின் முதல் பிரேத பரிசோதனையில், கொலை செய்யப்பட்டதாக மட்டும் இருந்தது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.

மக்கள் அதிகமாக வந்து செல்லும் சாலையின் நடுவில் உள்ள ஒரு கோவிலில், ஒரு சிறுமியை 8 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வாய்ப்பில்லை.

அந்த சிறுமியின் உடலில் சேறு பூசப்பட்டிருந்தது. அது கோவில் இருக்கும் பகுதியில் உள்ள சேறு அல்ல. எனவே சிறுமி வேறு எங்கோ கொல்லப்பட்டு, உடல் கோயில் வளாகத்தில் வீசப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி மக்கள், ரோஹிங்கியாவில் இருந்து வந்து வசிப்பவர்களை விசாரிக்க கோரினர். ஆனால் முட்டாள் அரசு அவர்களை அச்சுறுத்திவிட்டது.

ஒரு புதிய வழக்கை உருவாக்க இர்ஃபான் வானி என்ற அதிகாரியை அந்த அரசு அனுப்பியுள்ளது. அவர் ஏற்கனவே ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமில்லாமல், சிறுமியின் சகோதரரை விசாரணையின் போது காவல்நிலையத்திலேயே கொன்றவர்.

இர்ஃபான் வானி வந்தவுடன் ஒரு புதிய அறிக்கையை தாக்கல் செய்தார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஆதாரம் இன்றி பதிவுசெய்யப்பட்டது. அத்துடன் விசாரணை என்ற பெயரில் அப்பகுதியினர் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இதில் குற்றவாளிகள் காக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காவலர் உட்பட அப்பாவிகள் குற்றாவளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers