திருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான 4 நாளில் புதுப்பெண், கணவர் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு ஓடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்தவர் ராகேஷ் கன்சல். இவருக்கும் ஹிமானி என்ற பெண்ணுக்கும் நான்கு நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று அலுவலகம் முடிந்து புது மனைவியை பார்க்க ஆவலாக ராகேஷ் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் மனைவி இல்லாத நிலையில் பீரோ திறந்திருந்தது.

பீரோ உள்ளே பார்த்த போது லட்சக்கணக்கான பணமும், நகைகளும் திருடு போயிருந்தது தெரியவந்தது.

ஹிமானி தான் அவைகளை திருடி கொண்டு போனார் என்பதை உணர்ந்த ராகேஷ் இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ராகேஷின் பெற்றோர், திருமண புரோக்கர் மூலம் தனது மகனுக்கு ஹிமானியை திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதாவது ஹிமானியின் தந்தை மதுவுக்கு அடிமையானவர் மற்றும் தாய் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார் என புரோக்கர், ராகேஷ் குடும்பத்திடம் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து ராகேஷ் குடும்பத்தார் சரியாக விசாரிக்கவில்லை, ஹிமானி வீட்டுக்கும் சென்று பார்க்கவில்லை என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் ஹிமானியை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்