அந்த மாத்திரை விளம்பரத்தை நிறுத்துங்கள்: பிரபல தொகுப்பாளினி

Report Print Deepthi Deepthi in இந்தியா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மாத்திரை விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என தொகுப்பாளினி திவ்யா, ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.

தொகுப்பாளினி திவ்யா, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தபோது, மாத்திரை விளம்பரத்தில் நடித்துள்ளார்.

விளம்பரத்தை, 3 மாதம் மட்டுமே ஒளிபரப்பப்படும் என கூறி விட்டு, 2 ஆண்டுகளாக நிறுவனம் ஒளிபரப்புகிறார்கள், எனவே அதனை நிறுத்த வேண்டும் என திவ்யா காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும், விளம்பரத்தை தடை செய்யக்கோரி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதன்படி, நீதிமன்றமும் விளம்பரத்தை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்ததாக திவ்யா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்